2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

விமல் வழக்கு: நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு விளக்கமறியல்

George   / 2017 ஜனவரி 24 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

விமல் வீரவன்ச தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்ற போது, நீதிமன்றத்தை அவமதித்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டை நீதவான் நீதமன்றில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், நபரொருவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சத்தமிட்டார்.

பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு உரத்துச் சத்தமிட்ட அவரை, நீதிமன்ற பொலிஸார் இன்று கைதுசெய்தனர்.

அதனையடுத்து, நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்தபோது, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன, உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X