2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

வெலே சுதாவின் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 30 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

பணச் சலவை செய்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வெலேசுதா என்றழைக்கப்படும் கம்பொல சமந்த குமார, அவரது தாய் மற்றும் தங்கை தொடர்பான வழக்கை, எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று  (30) தீர்மானித்தது.

190 மில்லியன் ரூபாயைப் பணச்சலவை செய்ததாக, சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று இடம்பெறவிருந்த நிலையில், குற்றப்பத்திரத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டியுள்ளதால், பிறிதொரு தினத்தை வழக்கு விசாரணைக்கு வழங்குமாறு, பிரதிவாதிகளின் சட்டத்தரணியினால் கோரப்பட்டது.

இதற்கு, பிரதி சொலிசிட்ட ஜெனரல் துஷில் முதலிகேயினால் ஆட்சேபணை தெரிவிக்கப்படாததையடுத்து, வழக்கை எதிர்வரும் மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, அன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக திகதி குறிக்கப்படும் என உத்தரவிட்டார்.

வெலே சுதா, வெலே சுதாவின் தாயாரன ஞானவதி, தங்கை ருவந்திகா லக்மானி  ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X