2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மரண தண்டனைக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு நீட்டிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு, நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் 10 ஆம் திகதி குறித்த இடைக்கால தடையுத்தரவை  நீட்டிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார்.

அதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம், மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி  இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .