2025 மே 05, திங்கட்கிழமை

'எனது மணிக்கட்டு முறிந்தது'

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“எனக்கு அடித்தார்கள். இரண்டாவது முறை அடித்த போது கையால் தடுத்தேன். மூன்றாவது முறை தாக்கப்பட்ட போது எனது இடது கையினால் தடுத்தேன். அதனால் எனது மணிக்கட்டு முறிந்தது. அவ்வாறு தடுத்தபடியால் தான் நான் உயிர்பெற்றிருக்கிறேன் என நினைக்கிறேன்.

நெப்போலியனின் அடியாட்களினால் நாம் தாக்கப்பட்டோம். அப்போது நெப்போலியனின் மாவை சேனாதிராஜாவை தாக்குங்கள் என்ற குரல் கேட்டது. என் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி அடித்து நெருக்கப்பட்டது” என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராஜா, சாட்சியமளித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தாக்குதல் நடாத்தி இருவரை படுகொலை செய்த வழக்கு விசாரணை 14 வருடங்களின் பின்னர், யாழ் நீதிமன்றில் திங்கட்கிழமை (28) ஆறாவது நாளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் மாவை சோனாதிராஜாவின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நாகலிங்கம் நிசாந்தன் சாட்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X