Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
உங்களுக்கு சுடத்தெரியவில்லை என்றால் ஆயுதங்களை எங்களிடம் தாருங்கள் என கூறி எங்களிடம் இருந்த ஆயுதங்களை பறிக்க வந்தனர். ஆனால், நாங்கள் பிடுங்கி எடுப்பதற்கு அனுமதிக்கவில்லை என முன்னாள் நாடளுமன்ற உறுப்பினரும் அமரருமான நடராஜா ரவிராஜ் அவர்களின் மெய்பாதுகாவலர் ஒருவருமாகி அபயசிங்க முனசிங்க சாட்சியமளித்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறைதட தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை படுகொலை செய்த வழக்கு விசாரணை 14 வருடங்களின் பின்னர் யாழ். நீதிமன்றில் தொடர்வழக்கு விசாரணைக்காக பத்தாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை (02) எடுத்து கொள்ளப்பட்டது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 34ஆவது சாட்சியான அமரர் நடராஜா ரவிராஜின் மெய்பாதுகாவலரில் ஒருவரான அபயசிங்க முனசிங்க மன்றில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந் சாட்சியினை நெறிப்படுத்தியிருந்தார்.
கேள்வி:- உங்களுடன் வேறு எத்தனை பேர் அமரர் ரவிராஜ் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றினீர்கள்?
பதில்:- பொலிஸ் சீருடையில் இருவரும் என்னையும் சேர்த்து மூன்று பேர்.
சாந்திகுமார, திலகரட்ன.
கேள்வி:- அமரர் ரவிராஜ் ஏன் ஊர்காவற்துறை சென்றிருந்தார்.
பதில்: தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக
கேள்வி:- எங்கிருந்து உங்கள் பயணம் ஆரம்பமானது.
பதில்:- ஸ்ரான்லி வீதியில் உள்ள கூட்டணி அலுவலகத்தில் இருந்து
கேள்வி:- ஊர்காவற்துறை தேர்தல் பிரசாரத்துக்கு உங்களுடன் சேர்த்து எத்தனை பேர் போனீர்கள். நானும், என்னுடன் சேர்த்து இரண்டு சீருடை தரித்த இருவரும். சாரதியாக ஒருவரும் இருந்தார். அவரை நாங்கள் கோபி அண்ணா என்று கூப்பிடுவோம்.
கேள்வி:- எத்தனை வாகனம் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றது.
பதில்:- 10 வாகனம்.
கேள்வி: உங்களுடன் சேர்த்து எத்தணை பேர் போனீர்கள்.
பதில்:- கிட்டத்தட்ட 40 பேர்.
கேள்வி: நீங்கள் சென்ற வாகனம் எத்தனையாவதாக சென்றது?
பதில்:- 10ஆவதாக
கேள்வி:-ஊர்காவற்துறை நாரந்தனை பகுதியில் நீங்கள் சென்ற வாகனத்துக்கு முன்னால் என்ன நடந்தது என நீங்கள் கண்ணால் கண்டதை சொல்லுங்கள்?
பதில் : நாங்கள் ஊர்காவற்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, நாரந்தனை பகுதியில் எங்கள் வாகனத்துக்கு முன்னால் சென்ற வாகனத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
நாங்கள் கதவினை திறந்து வெளியில் சென்ற போது, மாவை சேனாதிராஜா காயங்களுடன் வந்தார். சிவாஜியைத் தாக்கிகொண்டிக்கிறார்கள் என சொன்னார். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்ததால் ரவிராஜ் ஜயாவை வாகனத்துக்குள் செல்லுமாறு கூறி உள்ளே தள்ளினோம். அப்போது எங்களை நோக்கி வந்த இருவர் எங்களுடன் தர்க்கப்பட்டு, உங்களுக்குச் சுடத் தெரியவில்லை என்றால் உங்கள் துப்பாக்கியை தாருங்கள் எனப் பறிக்க முற்பட்டனர். நாங்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. வந்தவர்கள் அப்படியே சென்று விட்டார்கள்.
கேள்வி:- உங்களை தாக்க வந்தவர்கள் என்ன வாகனத்தில் வந்தார்கள்?
பதில்:- வாகனத்தைக் காணவில்லை. தாக்கவந்தவர்களைக் கண்டோம்.
கேள்வி: எத்தனை பேர் வரையில் இருந்தார்.?
பதில்:10 பேர் வரையில் என அவர் தொடர்ந்து சாட்சியம் அளித்தார்.
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025