2025 மே 05, திங்கட்கிழமை

'நிலத்தில் வீழ்ந்து ஊர்ந்து சென்றேன்'

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சிவாஜலிங்கம் சிவப்பு சேட்டுடன் ஓடுகின்றான், அவனை கொல்லுங்கள் கொல்லுங்கள் என நெப்போலியன் கத்தினான். அந்தநேரம் பற்றைக்குள் இருந்து துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாக கேட்டன. எனது காலில் குண்டு பாய்ததனால் தொடாந்து ஓடமுடியாமல் போனது. நிலத்தில் வீழ்ந்து ஊர்ந்து, ஊர்ந்து சென்றேன்” இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தாக்குதல் நடாத்தி இருவரை படுகொலை செய்த வழக்கு விசாரணை, 14 வருடங்களின் பின்னர், யாழ். நீதிமன்றில் தொடர் வழக்கு விசாரணைக்காக திங்கட்கிழமை (28) எடுத்து கொள்ளப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 6ஆவது நாளான திங்கட்கிழமை, 8 ஆவது சாட்சியான, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாணசபை உறுப்பினருமாகிய சிவாஜிலிங்கம, மன்றில் ஆஜராகி சாட்சியமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X