2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

அர்ஜுனவுக்கான அவகாசம் நிறைவு

Editorial   / 2018 மார்ச் 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனுக்கு, குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு, நீதிமன்றம் வழங்கியிருந்த கால அவகாசம் நேற்றுடன் (08) முடிவடைந்தது. 

குற்றப்பலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு, கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை, தபால்மூலம் அனுப்பிவைப்பதற்கு முடியாமல் போனதாக, கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது.  

அர்ஜுன மஹேந்திரன் வழங்கியிருந்த சிங்கப்பூர் விலாசத்தில் அவர் இல்லாதிருந்தமையே, அதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, சர்வதேச தபால் சேவையின் சிங்கப்பூர் பிரதிநிதிகளால்,   அர்ஜுன மகேந்திரனின் அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு மேற்கொண்டு விடயம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் நேற்று (08) தெரிவித்திருந்தது.  எவ்வாறெனினும், அந்த அலைபேசி அழைப்புக்குப் பதிலளித்த லக்ஷ்மன் என்பவர், பெப்ரவரி மாதமளவில் அர்ஜுன மஹேந்திரன், இலங்கைக்குத் திரும்புவாரெனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், பெப்ரவரி மாதத்தில் அவர் வருகை தராமையால், கடந்த வழக்கு விசாரணையின் போது, அவருக்கான கால அவகாசம், நேற்று (08) வரையிலும் வழங்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .