2025 நவம்பர் 01, சனிக்கிழமை

ஆசிரியருக்கு பிணை

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

புத்தளம், ஆனமடுவ கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் பணியாற்றிவரும் ஆசிரியை ஒருவரை (வயது 28), பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியரை
(வயது 30),  1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையில் விடுவிக்குமாறு, ஆனமடுவ நீதவான், நேற்று உத்தரவிட்டார்.   

மேற்படி பாடசாலையில் பணியாற்றிவரும் ஜகத் புஸ்பகுமார (வயது 30) என்பவருக்கே, இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   

பாடசாலையின் ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த தனது கைப்பையை எடுப்பதற்காகச் சென்ற ஆசிரியையை, மேற்படி நபர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியை நவத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், மேற்படி நபரை கைதுசெய்து நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X