Kogilavani / 2017 ஜூன் 28 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
17.51 கிராம் ஹெரோய்னை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு, நேற்று (27) மரண தண்டனைத் தீர்ப்பளித்தது.
கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் வைத்து, 17.51 கிராம் ஹெரோய்னுடன் சந்தன பிரதீப் ஹேவாவத்த என்ற நபர் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில், கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம், தீர்ப்புக்கான தினமான அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி அவருக்கு, மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .