Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 22 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ இருந்தபோது, அவரை இலக்கு வைத்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையை ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி, நேற்று (21) ஒத்திவைத்தார்.
வழக்கில் ஆஜராகவேண்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் ஆஜராயுள்ளதாக நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள பித்தளைச் சந்தியில் 2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025