Kogilavani / -0001 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு எதிரான வழக்கில் புதிய சாட்சியாளர்கள் இருவரை சேர்த்துக்கொள்ளவது தொடர்பில், இம்மாதம் 19ஆம் திகதி அறிவிக்கப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (13) உத்தரவிட்டது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், சமய அனுட்டானத்துக்கான ‘சில்’ ஆடைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில், சட்டமா அதிபரினால், மேற்குறித்த இருவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் நேற்று (13) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாட்டாளர் தரப்பில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை புதிய சாட்சியாளர்களாக இணைத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஷித் முதலிகே, கோரிக்கை விடுத்தார்.
முறைப்பாட்டாளர் தரப்பின் சாட்சியங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய சாட்சியாளர்களை இணைப்பது ஏன் என, பிரதிவாதிகளின் சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, கேள்வியெழுப்பியதையடுத்து, இது தொடர்பான முடிவு, 19ஆம் திகதி அறிவிக்கப்படும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025