2025 மே 05, திங்கட்கிழமை

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளருக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷந்தன கலங்சூரிய, இன்று உத்தரவிட்டுள்ளார்.

தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்,  மாளிகாவத்தை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தொடந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாளிகாவத்தை பிரபதீப மாவத்தையில் 3ஆம் திகதி  நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையிலும் மக்களை தூண்டும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X