Niroshini / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடக பேச்சாளராக இருந்த வே.தயாநிதி என்ற தயா மாஸ்டர் இன்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச விரோத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கெதிராக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட இவருக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு என்பதனால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி புதிய பிணை நிபந்தனையை வித்தித்திருந்தார்.
இந் நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் பொறுமதியான நான்கு அரச உத்தியோகத்தர்களை கொண்ட பிணையிலும் ஐந்து இலட்சம் ரூபாய் காசுப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்திரவிட்டது.
இதேவேளை தயா மாஸ்டர் தினமும் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரைக்குள் கையொப்பமிட்வேண்டும் எனவும் வட மாகாணத்தை விட்டு செல்ல முடியாது என்ற நிபந்தனைகளும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
02 Nov 2025
02 Nov 2025
02 Nov 2025