Editorial / 2017 ஜூலை 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து காட்டுக்குள் பெண்ணை இழுத்துச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவருக்கு, 12 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விவசாயியின் மனைவியைக் கடத்திச் சென்று, வில்பத்து வனப்பிரதேசத்தில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக, இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகநபர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றவாளிகள் இருவருக்கும், கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
நொச்சியகம பிரதேசத்தைச் சேர்ந்த அசங்க பிரசாத் ஆரியதாச மற்றும் ரன்கொன் சமன் ஆகிய இருவருக்கே, இத்தண்டனை விதிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினத்தில், குறித்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், மேற்படி இருவருக்கும், தண்டனை, அபராதம் மற்றும் நட்டஈடு விதிக்கப்பட்டது.
அதன்படி, திருமணமான பெண்ணைக் கடத்திய குற்றச்சாட்டில் தலா 5 வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வன்புணர்வுக்கு உட்படுத்தியமைக்காக தலா 12 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் அதனைச் செலுத்தாவிட்டால், மேலும் 15 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
32 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago