Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி. பாரூக் தாஜுதீன்
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டுத் தொடர்பான மேல் நீதிமன்ற வழக்கொன்றில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை, வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க உத்தரவிட்டுள்ளார். ஜயமஹ முதலிகே பிரியந்த ஜயமஹ என்ற குறித்த சந்தேகநபர், பொய்யான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கி, சட்டமா அதிபரையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய குற்றத்திலேயே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
கண்டி தர்மராஜ கல்லூரியில் மாணவனை அனுமதிப்பதற்காக, ஜனாதிபதியின் செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோரின் கையெழுத்துகளைப் போலியாக இட்ட குற்றச்சாட்டில், சந்தேகநபருக்கெதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனினும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர் தனது சகோதரர் எனக் குறிப்பிட்ட அவர், சிறுநீரகக் கோளாறுக்காக அவர் கொழும்பில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், ஆகையால் வழக்கைக் கொழும்புக்கு மாற்றுமாறும் கோரியுள்ளார்.
பத்மினி என். ரணவக்க முனையில் கொழும்பில் இவ்வழக்கு இடம்பெற்று வரும் போது, சக்கரக்கதிரையில் வந்த அவர், தனக்குப் பிணையும் பெற்றுள்ளார். அவர் சார்பில, எரங்க அமரதுங்க என்பவர், சரீரப் பிணையும் பெற்றுள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், போலியான மருத்துவச் சான்றிதழ்களை வழங்கிய அவர், நீதிமன்ற அமர்வுகளில் பங்குபெறுவதைத் தவிர்த்துள்ளார். அவர் வழங்கிய மருத்துவச் சான்றிதழ்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர்களால் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தாலும், அவ்வாறான எந்த வைத்தியரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றவில்லை எனவும் இலங்கை அரசாங்க வைத்தியர்கள் சங்கத்தில் பதியப்படவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேநேரத்தில், சரீரப் பிணை வழங்கிய எரங்க என்பவர், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர், இறந்து விட்டதாகத் தெரிவித்து மரணச் சான்றிதழொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முயன்றுள்ளார்.
ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட மரணச் சான்றிதழும் பொய்யானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர், குற்றஞ்சாட்டப்பட்டவரும் எரங்கவும், நீதிமன்றத்துக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, எரங்கவை டிசெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, சந்தேகநபரை, வழக்கு முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago