2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

நள்ளிரவில் கைதான 37 பேருக்கும் பிணை

Princiya Dixci   / 2017 ஜனவரி 26 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள மின்சக்தி அமைச்சுக்கு முன்பாக, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட ‘மனிதவலு’ ஊழியர்கள் 37 பேரும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவ்வனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மின்சக்தி அமைச்சினால் தற்காலிக அடிப்படையில் இணைந்துகொள்ளப்பட்ட தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி, பல நாட்களாக அந்த ஊழியர்கள், சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த இடத்திலிருந்து கலைந்துசெல்வதற்கான இடைக்கால உத்தரவை, கொள்ளுப்பிட்டி பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பெற்றிருந்தனர்..

அந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், உண்ணாவிரதப் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தனர். எனினும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அத்தடையுத்தரவுக்கு தலைவணங்காது, தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், பொரளை, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை, நாரஹேன்பிட்டிய, கறுவாத்தோட்டம் மற்றும் பம்பலப்பிட்டிய ஆகிய பொலிஸ் நிலையங்களைச்சேர்ந்த பொலிஸார் இணைந்து, அவ்விடத்தில் விசேட நடவடிக்கையை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேற்கொண்டு, 37 பேரையும் கைதுசெய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X