Princiya Dixci / 2017 ஜனவரி 19 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை இலண்டனுக்கு அனுப்ப முயன்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவர் சார்பிலும், பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் பிணை மனுத் தொடர்பிலான நிலைப்பாட்டை, இம்மாதம் 25ஆம் திகதி அறிவிக்குமாறு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று (18) உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களான ஜேசுரத்னம் ஜெகசம்சன், மகாதேவா பிரசன்னா, சுப்பிரமணியம் நகுலராசா ஆகியோர் சார்பில், சட்டத்தரணிகளான அஜித் பிரசன்ன, சுரங்க காந்த ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன், பிணை மனுவவையும் சமர்ப்பித்தனர்.
சந்தேகநபரான நகுலராசா, அரச புலனாய்வுச் சேவையில் இருந்தவர் எனவும் தற்போது அவர், 9 மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கூறிவருகின்றனர் எனினும், இதுவரை மன்றுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதைக் கருத்திலெடுத்த நீதவான், பிணை மனுத் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள விரைவு அஞ்சல் (கொரியர்) நிறுவனத்தினூடாக, புலிகளின் இலட்சிணை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை மிகவும் சூட்சுமமான முறையில் பொதியொன்றுக்குள் மறைத்து வைத்து, அதனை இலண்டனுக்கு அனுப்பமுயன்றமை தொடர்பில் விசாரிக்கப்பட்டு, வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
அதன் பின்னர், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, சுப்பிரமணியம் நகுலராசா என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
35 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025