2025 மே 05, திங்கட்கிழமை

பசிலுக்கு பிணை

George   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான்  நீதிமன்ற நீதிபதி கடந்த திங்கட்கிழமை (01) உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அவரை பிணையில் செல்ல உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, கடந்த 18ஆம் திகதி சென்ற, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைதுசெய்யப்பட்டார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X