Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில், தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றிய மாணவிகள் பலரை, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டுவரும் சந்தேகநபரான வர்த்தகர் நிமல் பீரிஸின், எதிர்பார்த்த பிணை விண்ணப்பத்தை நிராகரித்த கண்டி நீதிமன்ற நீதவான் புத்திக சி.ராகல, அவரைக் கைது செய்யுமாறு கட்டளையிட்டார்.
அந்தத் தலைமைத்துவப் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளரான சந்திமால் கமகே, சட்டத்தரணியின் ஊடாக, கண்டி பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவில் அண்மையில் சரணடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றில் பங்குபற்றிய மாணவிகள் பலரை, வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட, கைதான வாரியபொலவைச் சேர்ந்த சந்திமல் கமகே (வயது 35) என்பவரை, எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் புத்திக சி.ராகல, கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவிகளை, மீண்டும் பரீட்சையில் சித்தியடையச் செய்வதற்காகவே, இந்தப் பயிற்சி முகாம், 3 மாதகாலத்துக்கு நடத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளே, அதிகம் கல்வி பயின்று வந்துள்ளனர். மேற்படி பிரதேசத்தில், கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இந்நிறுவனம் இயங்கி வருவதாகவும் இதுவரை பலர் பயிற்சிகளை முடித்துக்கொண்டு
வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில், இம்முறை நடத்தப்பட்ட பயிற்சியில், 17 மாணவிகள் பங்கேற்றுள்ளதுடன், அவர்களில் 10 பேர், இந்நிலையத்திலிருந்து தப்பி வந்து,, அவர்களே இவ்விவரத்தைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையத்தில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று (02), பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மாணவிகளில் சிலர், அந்நிறுவனத்தில் விதிக்கப்பட்டிருந்த கடும் பாதுகாப்பு ஒழுங்குகளையும் மீறி தப்பிச் சென்று, காட்டுப் பகுதியில் மறைந்துள்ளனர். காட்டு வழியாக வந்த பிரதேசவாசி ஒருவரைச் சந்தித்துள்ள இவர்கள், விவரங்களைக் கூறியுள்ளதுடன், அவரது உதவியுடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, இச்சம்பவத்தை தெரியப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025