2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புலி உறுப்பினர் சுட்டுக் கொலை; ஒருவருக்கு மரண தண்டனை

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு, மற்றுமொருவருக்குக் கடுங்காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஒருவரைக் குற்றவாளியாக இனங்கண்ட சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர ரணராஜ, அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தார்.   

வாழைச்சேனை-கரதிவெல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே (வயது 35) இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

சிலாபம் பிரதேசத்தில் உள்ள உணவகமொன்றில், 2005ஆம் ஆண்டு ஜூலை மாதமோ அல்லது அதனை அண்மித்த தினமொன்றிலோ, ஆறுமுகன் பூவேந்திரன் (வயது 23) என்பவரைச் சுட்டுக்கொலை செய்தமை, அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திலிருந்த மற்றுமொரு நபருக்குக் காயத்தை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஆயுதத்தை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

அதிக்குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், தான் நிரபராதி என்று, நீதிபதியிடம் பிரதிவாதி தெரிவித்திருந்தார். எனினும், வழக்கு விசாரணையின் போது, அவர் குற்றவாளியென உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்தே, அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X