Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுசம்பவத்தில் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் திரும்ப திரும்ப இச்சம்பம் தவறுதலாக இடம்பெற்றது என பாதிக்கப்பட்ட தரப்பினருக்குக் கூறுவது விசாரணையின் நம்பிக்கைத் தன்மையை இழக்கச் செய்வதாகவும் இதற்கு நீதவான் சரியான அறிவுறுத்தல்களை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து யாழ். பொலிஸார் ஐவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணையானது, நேற்று வெள்ளிக்கிழமை (02) யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு, கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்ட அதே தினத்தில் பாதிக்கபட்டவர்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
மறுநாள் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற உயிரிழந்த மாணவன் நடராஜா கஜனின் தாயாரிடம் மாங்குளம் பொலிஸார், 'இச்சம்பவம் ஆனது வேண்டும் என்று நிகழ்த்தப்படவில்லை. தவறுதலாக இடம்பெற்றது' எனக் கூறியுள்ளார்.
இது போன்று சம்பவம் இடம்பெற்ற தினத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் இதே விடயத்தை பாதிக்கபட்டவர்களை அழைத்துக் கூறியுள்ளனர்.
இவ்வாறு ஒரு விடயத்தை திரும்ப திரும்ப வலியுறுத்துவதனால் பொலிஸ் விசாரணை மீதான உண்மைத் தன்மை இழக்கப்பட்டுள்ளது. தாம் இதில் நம்பிக்கை இன்றி உள்ளோம் என இறந்த மாணவர்களின் பெற்றோர் கூறியுள்ளனர் என்ற விடயத்தை நீதவானின் கவனத்துக்குப் பாதிக்கபட்ட மாணவர்கள் தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கொண்டுவந்தார்.
இவ்வழக்கை நீதிமன்ற நியாயத்துக்கு உட்பட்டவாறு முன்னெடுத்து செல்லும் நீதவான் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து இதில் சம்பந்தபட்ட பொலிஸாருக்கு உரிய வலியுறுத்தலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களை வாக்குமூலப் பதிவுக்கு அழைக்கும் போது, சாட்சியங்கள் பாதுகாப்பு மற்றும் பாதிக்கபட்டவர்கள் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நீதிமன்ற அனுமதி பெற்று பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளின் ஆலோசனையினை பெற்று வாக்குமூலம் வழங்குவதற்கும் மன்று வலியுறுத்த வேண்டும் எனவும் நீதவானை சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.
குறித்த விடயத்தை கவனத்தில் எடுத்த நீதவான், குறிப்பிடப்பட்ட விடயங்களை இவ்வழக்கின் பாரதூரமான வி;டயமாக கருதி மன்று இவற்றை கவனத்தில் கொள்கிறது. குறித்த விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்குறிப்பிட்ட விடயத்துக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்ததுடன், இவ்வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதுவரையில் சந்தேகநபர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago