George / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த 8ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை இரத்துச் செய்து, நீதிமன்றத்தினால் சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேன்முறையீடு செய்தார்.
கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திலேயே அவருடைய சட்டத்தரணிகள், நேற்று வியாழக்கிழமை (22), அவருக்கான மேன்முறையீட்டு மனுவைக் கையளித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக கடந்த 20ஆம் திகதியன்று மேன்முறையீடு செய்திருந்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுக்களை முன்வைப்பதற்காக, தமது சட்டத்தரணிகள் ஊடாக, தமது மனுக்களை ஒப்படைத்திருந்தனர்.
அநுர துஷார டீ மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
தமக்கு வழங்கப்பட்ட மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சட்டத்துக்கு முரணானது எனவும் தம்மை விடுவிக்குமாறு கோரியும் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், துமிந்த சில்வாவும் மேன்முறையீடு செய்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாகச் செயற்பட்டவருமான துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு கடந்த 8ஆம் திகதியன்று மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025