2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2016 நவம்பர் 22 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அதில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கில்,

பிரதிவாதியின் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் நாளாக, ஜனவரி 26ஆம் திகதியை, கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) நிர்ணயித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் தமக்கு 142.5 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து, இலங்கை போக்குவரத்து சபையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிரதிவாதிகளாக, மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு, மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில், அவருடைய சட்டத்தரணியால், நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X