2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

ராஜபக்ஷ சகோதரியின் காணிக்குள் நுழைந்தோர் விடுதலை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியினது காணிக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து, அம்மூவரும் நேற்று (08) முழுமையாக விடுவிக்கப்பட்டனர்.  

மாத்தறை, தெனியாயவில் உள்ள காணிக்குள்ளேயே, மேற்படி மூவரும், 2011ஆம் ஆண்டில் அத்துமீறி நுழைந்தனர் என்று கூறப்படுகின்றது. இவர்களுக்கு எதிராக, மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

கடந்த ஆட்சியின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்வதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இந்த மூவரும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.  

சாலிக்க விமலசேன, தயா நெத்தசிங்ஹ மற்றும் ரவீந்திர ஆகிய ஊடகவியலாளர்களே, இவ்வாறு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X