2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரத்துபஸ்வல சம்பவம்; பிரிகேடியருக்குப் பிணை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா-ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய மற்றும் இராணுவ சார்ஜெண்ட் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

இவ்வழக்கு, கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவ்விருவருக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.  

ரத்துபஸ்வல பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி, 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு,  ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இதில், பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் அநுர குணவர்தன தேசப்பிரிய உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X