Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஜூலை 21 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா திபான்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அறுவருக்கு எதிராக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ரோஹான் அபேசூரியவினால், மேல் நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (21) அதிகுற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஐந்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே இந்த அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு, உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, வழக்குடன் தொடர்புடைய ஏனைய மூவருக்கு (1ஆம், 5ஆம், 6ஆம் சந்தேகநபர்கள்) அழைப்பாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டுள்ள 2ஆம் 3ஆம் 4ஆம் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், புதன்கிழமையன்று (20) மேல்நீதிமன்றத்தில் பிணைக் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த பிணைக் கோரிக்கை, நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையிலேயே அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், ரவிராஜ் குடும்பநலன் சார்பாக, சட்டத்தரணி கே.வி தவராசா மற்றும் சட்டத்தரணிகளான ஆர்னோல்ட் பிரியதர்ஷன், குகராஜ், செல்வராஜ் துஷ்யந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
2006ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதியன்று, நாரஹேன்பிட்டியவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் பலியானமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
51 minute ago