Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்று பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் காணவில்லை என, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில், அவருடைய மனைவியால், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளதாக, வெல்லம்பிட்டி பொலிஸாரால், கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அவர், உள்நாட்டில் உள்ளாரா அல்லது வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாரா என்ற கோணங்களில் விசாரணை செய்துவருவதாக பொலிஸார் அறிவித்ததையடுத்து, அது தொடர்பில், ஒக்டோபர் 26ஆம் திகதி அறிக்கை சமர்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, நடராஜா ரவிராஜ் எம்.பி படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, ரவிராஜ் எம்.பியின் மனைவியால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் இரண்டாவது பிரதிவாதியாக, பிரசாத் ஹெட்டியாராச்சி குறிப்பிடப்பட்டுள்ளார்.
அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு,
மேன்முறையீட்டு நீதிமன்றம், பிறடிவிறாந்து பிறப்பித்துள்ளதுடன், கொழும்பில் மாணவர்கள் ஐவர் கடத்தப்பட்டு, திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவருக்குப் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
12 minute ago
16 minute ago