2025 மே 05, திங்கட்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு  வர்த்தக நீதிமன்றம், இன்று தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 10 மற்றும் 15ஆம் திகதியில் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட “நெத்த வெனுவட எத்த” என்ற  தலைப்பிலான புத்தகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் அனுமதியின்றி விமல் வீரவங்ச வெளியிட்டுள்ளதாகவும்,  இந்த புத்தகம் புலமைச்சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும்  இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X