2025 நவம்பர் 01, சனிக்கிழமை

விமலின் ‘அந்த கடவுச்சீட்டு’ வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2017 மே 16 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு, செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

டுபாய்க்குச் செல்வதற்கு முயன்ற போதே, அதிகாரிகளினால் அவர் கைதுசெய்யப்பட்டார்.  

அவருக்க எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த எபிட்டவல, முன்னிலையில் நேற்று (16) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

தன்னுடைய கடவுச்சீட்டு காணாமல் போனதாக  நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பின்னர், புதிய கடவுச் சீட்டையும் பெற்றுள்ளார். பழைய கடவுச்சீட்டும் இரத்துச் செய்யப்பட்டது.

இந்நிலையில், இரத்துச் செய்யப்பட்ட பழைய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவர், 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதியன்று டுபாய்க்கு செல்வதற்கு முயன்றபோதே, அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X