Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்ச மீதான வழக்கை, மே மாதம் 25, 30, 31ஆம் திகதிகளில் விசாரணை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (08) திகதிகளை குறித்தது.
போலிப் பெயர் மற்றும் போலியான பிறந்த தினத்தைக் கொண்டு, ஷஷி வீரவன்ச, இரண்டு அடையாள அட்டைகளை எடுத்துள்ளமை, அவற்றைக் கொண்டு இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷேஹசா உதயகாந்தி மற்றும் ரணசிங்ககே ரண்முத்து முதியன்சலாகே ஷிர்ஷா உதயகாந்தி ஆகிய பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகள் பெறப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிணை வழங்கப்பட்டபோது, மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராக வேண்டும் என, ஷஷி வீரவன்சவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி திலீப பீரிஸ் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
நகர்வுப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு அந்த உத்தரவு மாற்றப்பட்டதாகவும் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் மாதாந்தம் ஆஜராகவேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தாகவும் கூறிய அவர், அந்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரினார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணைக்கு திகதிகளை நிர்ணயித்த நீதவான், வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
4 hours ago