2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஆணொருவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புன்னாலைக் கட்டுவன் வடக்குப் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து நேற்று திங்கட்கிழமை (02) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலங்காடு வடக்குப் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் அருந்தவராசா (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பி மயிலங்காடுப் பகுதியில் தங்கியிருந்ததுடன், புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள காணியொன்றையும் கொள்வனவு செய்திருந்தார்.

அவர் கொள்வனவு செய்திருந்த காணியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் மனைவி, பிள்ளைகள் சுவிஸ் நாட்டில் இருப்பதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X