Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொஸ்கொட பகுதியிலுள்ள அரசாங்கப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
10ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர், பிறிதொரு மாணவன் மீது இருந்த முன்பகை காரணமாக, அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியபோது, அதை தடுக்க முற்பட்ட மற்றைய மாணவனும் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சந்தேகநபரான மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடு நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025