2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கப்பம் கோரி இளைஞனை கடத்திய 5 பேர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கப்பம் பெறும் நோக்கில் இளைஞனை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 5 பேரை தங்காலை பொலிஸ் பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர்.

85 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி, கடந்த 7ஆம் திகதி ஊரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பண்டாரகம பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பு எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து தங்கல்லை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இளைஞன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தங்காலை, மாத்தறை, அப்பலாந்தோட்டை மற்றும் எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தங்காலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .