Editorial / 2017 டிசெம்பர் 12 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 7ஆம் திகதி மொனராகலை சிறையில் இருந்து தப்பிச் சென்ற இரு கைதிகளுள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த நிலையிலேயே நேற்றைய தினம்(11) ஒரு சந்தேகநபர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஹொரனை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தச்சந்தேகநபர் மொனாராகலை, இங்கினியாகலை, சியம்பலாண்டுவ, எத்திமலை, தம்பலகல, புத்தள, வெல்லவாய, பிபிலை, மெதகம, மாகலுகொல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 53 குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும்,இவர் இன்றைய தினம் பண்டாரகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறையில் இருந்து தப்பிச் சென்ற மற்றைய கைதியை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஹொரனை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
17 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
15 Nov 2025
15 Nov 2025