Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 19ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த சுனில் சாந்த என்ற கைதி மீமுரே பிரதேசத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவிசாரணை பிரிவினரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கமைய இவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகநபர் தப்பிச்சென்றமைத் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி கேகாலை சிறைச்சாலையிலிருந்து மத்துகம நீதவான் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைகளுக்காக சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்து வரப்பட்டு, மீண்டும் கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட போதே சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025