2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கொலையுடன் தொடர்புடைய 3பேர் கைது

George   / 2016 ஜூலை 05 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மஹாவிலச்சிய, ஒயாமடுவ பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி இரவு, குறித்த பெண்ணை கொலை செய்து அவரிடமிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக்கொண்டு குறித்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அநுராதபுரம் குற்றபுலனாய்வு அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட தங்க மாலைகள் 5, தோடுகள் 3 ஜோடி உள்ளிட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சூரியவெவ, மீரிகமை பிரதேசங்களில் இடம்பெற்ற சொத்து கொள்ளைச் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .