Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வசந்த சந்திரபால,ரீ.கே.றஹ்மத்துல்லா
அரசாங்க புலனாய்வுப் பிரிவின் அம்பாறை அலுவலகத்துக்குக் கிடைத்த தகவலுக்கமைய, தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர்களாக செயற்பட்ட ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் மூவர் இன்று அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள் ஒருவரான, மொஹிதீன் பாவா மொஹமட் ரூமி பொலன்னறுவை கந்துருவெல பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ஜமாஅத்தே மில்அத்தே இப்ராஹிம் அமைப்பின் பொலன்னறுவை பிரதேசத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார். இவர் சஹரானால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமிலும் கலந்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய சந்தேகநபரான மொஹமட் ரியால் மொஹமட் சாஜித் மாவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் இவரும் நுவரெலியாவில் பயிற்சிப் பெற்றுள்ளார்.
மூன்றாவது சந்தேகநபரான மொஹமட் ரம்சீன் வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் இவர், ஹம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சிப் பெற்றவரென்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த 3 சந்தேகநபர்களுடன் இதுவரை இந்த அமைப்பின் 9 உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago