Kanagaraj / 2016 மே 10 , மு.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெந்தோட்டைப் பிரதேச சபையின் உள்ளகக் கணக்காய்வு அதிகாரியின் மீது எண்ணெய் கலந்த சாணத்தால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் மூவரையும், இன்று செவ்வாய்க்கிழமை (10) வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு, பலப்பிட்டிய பதில் நீதவான் இஸட்.பீ.எம். லியனகே, நேற்றுத் திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
பெந்தோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெந்தோட்டை பிரதேச சபைக்கு, கடந்த 6ஆம் திகதியன்று கடமைக்குச் சென்றுகொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு அண்மையில் இருந்த சி.சி.டி.வி கமெராவில் பதியப்பட்டிருந்த காட்சிகளை அடிப்படையாக வைத்தே சந்தேகநபர்களைக் கைதுசெய்ததாக, பெந்தர பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
27 minute ago
43 minute ago