Editorial / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியின் திகனவில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னால், அரசாங்கத் தரப்புகளே காணப்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என, ஒன்றிணைந்த எதிரணி நேற்று (04) குற்றஞ்சாட்டியது. ஊழலுக்கெதிரான இயக்கத்தாலேயே இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என, அவ்வணி குறிப்பிட்டது.
கொழும்பில் நேற்று (04) கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, அவ்வணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொல்வதற்கான சதித் திட்டம் வெளிப்படுத்தப்பட்ட போதே, திகன வன்முறைகள் தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.
“இந்தச் சம்பவத்தின் (திகன) பின்னால், பொலிஸின் முக்கிய உயரதிகாரிகள் சிலர் இருக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டது. இதற்கமைய, அரசாங்கம் இதற்குப் பின்னாலுள்ளது என்பது வெளிப்படை. அளுத்கமவில், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளோடு, இது பொருந்திப் போவதாக உள்ளது.
“இவ்வாறான மூன்றாம்நிலை அரசியலை அரசாங்கம் பயன்படுத்தி, தேர்தல்களை வெற்றிகொள்ள முற்படுகிறது. அதேபோன்று, சமூகத்தின் இன முரண்பாடுகளையும் ஏற்படுத்த முயல்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சதி முயற்சி தொடர்பான அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பாக, தளர்வான கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது எனக் குற்றஞ்சாட்டிய அவர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இது பாரதூரமான விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025