2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி நால்வர் காயம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தனகல்ல பகுதியில் நேற்று இரவு 10.50 மணியளவில் ​மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

அத்தனகல்ல வியாபார சங்கம் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த சங்கீத நிகழ்ச்சியொன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர்  37 வயதான ஹெய்யன்துட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த மணல் வியாபாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தத் துப்பாக்கிச் சூட்டு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணங்கள் தெரியவரவில்லை என்றும், இதனை மேற்கொண்ட சந்தேகநபர்களும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .