Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 16 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டம், மத்துகம நகரத்திலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்ற பெண்ணை, சி.சி.டி.வி கமெரா மூலம் அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நகை வாங்குவதற்காக நகைக்கடைக்குச் சென்று தங்கச்சங்கிலிகளை கைகளில் எடுத்துப் பார்வையிட்டுள்ளார். பின்னர், 05 தங்கச்சங்கிலிகளை கைக்குட்டைக்குள் மறைத்து வைத்து விட்டு, தனக்குப் பிடித்த வகையில் சங்கிலிகள் இல்லையெனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், நகைப்பெட்டியை எடுத்துப் பார்த்த போது 05 சங்கிலிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கடை உரிமையாளர், வழங்கிய முறைப்பாட்டுக்கமைய மத்துகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் மூன்று இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியுடைய தங்கச் சங்கிலிகளே திருட்டுப் போயுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .