2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்டிய அறுவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், ஆறுபேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சனிக்கிழமை (13) இரவு 11.50க்குப் புத்தள, வெல்லவாயப் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து, முச்சக்கரவண்டி, மின்சூழ் (டொச்லைட்), அலவாங்கு, வேறுவகையான எண்ணைய்ப் போத்தல்கள் 3, உருத்திராட்சம் மாலைகள் 3, சின்ன வலம்புரி சங்குகள் இரண்டுடன் மாலை, ஆணிகள் 3, ஏணி என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெல்லவாய, அலவ்வ, கம்பொல, மாத்தளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 35,37,39,43,44 வயதைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லவாயப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X