Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சிலாபம்,மாதம்பே,மாரவில உள்ளிட்ட பல பகுதிகளில் வலி நிவாரணி வில்லைகள் விற்ற நபர் ஒருவர் மாதம்பே பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய பொலிஸ் அதிகாரி ஒருவரை குறித்த வில்லைகளை கொள்வனவு செய்வதற்காக அனுப்பி சந்தேகநபரை கைதுசெய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரியிடம் ஒரு வில்லை 300 ரூபாவிற்கு விற்கப்பட்டதாகவும்,சந்தேகநபரை கைதுசெய்த சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து 2500 வலி நிவாரணி வில்லைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் சிலாபம் பிரதேச பாடசாலைகளில் இடம்பெற்றுள்ள பல அசம்பாவித சம்பவங்களுக்கு குறித்த வலி நிவாரணி வில்லைகளே காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
38 minute ago