Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 14 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
போதைப் பொருள் பாவிப்பவர்கள் பயன்படுத்தும் வலி நிவாரண வில்லைகள் 300 அடங்கிய பக்கெற்றுகளுடன் இளைஞர் ஒருவரை, நீர்கொழும்பு - குரணை பிரதேசத்தில் வைத்து, நீர்கொழும்பு பிராந்திய சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார், நேற்று (13) மாலை கைதுசெய்துள்ளனர்.
கல்கமுவை, கொக்வல பிரதேசத்தைச் சேர்ந்த, மகேஸ் மதுசங்க என்ற (வயது 23) இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை சோதனைக்குட்படுத்திய போது, அவரது காற்சட்டையில் இருந்து மறைத்து வைத்திருந்த நிலையில், டிரமெடோல் எனும் 300 வலி நிவாரண வில்லைகளை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் இருந்த வந்த நபர் ஒருவர், நண்பர் ஒருவரிடம் இவற்றை ஒப்படைப்பதற்காக தன்னிடம் வழங்கியதாக, சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் இந்த வில்லையை “அப்பிள் குளிசை” என்று அழைப்பதாகவும் ஒரு குளிசை, 300 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், மூன்றாம் வகுப்பு வரையிலேயே கல்வி கற்றுள்ளதாகவும் 9 வருட காலமாக கட்டுநாயக்க - எவரிவத்தை பகுதியில் தொழில் செய்து வந்ததாகவும் தற்போது பழங்கள் விற்பனை செய்து வருவதாவும், விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.
27 minute ago
31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
59 minute ago