2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

வெலே சுதா விவகாரம்; 85 அலைபேசி இலக்கங்கள் அதிகாரிகளுடையது

George   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாரூக் தாஜுதீன்

வெலே சுதாவிடமிருக்கும் அலைபேசி இலக்கங்களில் 85 இலக்கங்கள் சிறைச்சாலை அதிகாரிகளுடையது என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று திங்கட்கிழமை கொண்டுவந்தனர்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமார விதானகேயிடம் 184 அலைபேசி இலக்கங்கள் இருக்கின்றன என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தியே போதைப்பொருட்களைவிற்று முறைகேடான முறையில் பணம் சம்பாதித்துள்ளார் என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில், நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபரான வெலே சுதா, 7.05 கிராம் ஹெரோய்ன் விற்பனை செய்ததாக முறைப்பாட்டாளர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

இரசாயன பகுப்பாளர் அறிக்கையின் பிரகாரம் ஹெரோய்ன் 7.05 கிராம் என்று கூறப்பட்ட போதிலும் வெலே சுதா கைதுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில் அவரிடம் 84 கிராம் இருந்ததாகவும் 1 கிராமில் 200 பக்கற்றுகள் வியாபாரத்துக்கு தயாராக இருந்ததாகவும் அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.   

எனினும், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சிகள் இல்லையென்று பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே வழக்கு ஏற்கெனவே  ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X