George / 2017 மே 08 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சில பகுதிகளில் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கம்பளை பிரதேசத்தில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓபநாயக்க நகரத்தில் உள்ள விற்பனை நிலையத்துக்குள் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடைய யாரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை ஹபரண, அலுத்ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் பெண்ணை சிறிய ரக லொறியில் ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில், அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பெண், ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட இருவரையும் அந்தந்த பிரதேசத்துக்கு பொறுப்பான நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
19 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago