2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விபசார விடுதியை நடத்திய பெண் ஒருவர் உட்பட 3 யுவதிகளுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் புபுதுபுர பகுதியில் விபசார விடுதியினை நடாத்திச் சென்ற பெண்ணையும் அத்தொழிலில் ஈடுபட்ட 3 யுவதிகளையும் எதிர்வரும் 29ஆம்  திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு (16) அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் அநுராதபுரம் புபுதுபுர பகுதியில் வீடொன்றில் 3 யுவதிகளை தங்க வைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததோடு 2500- 5000 ரூபா வரையான பணத்துக்கு அவர்களை பல்வேறு நபர்களுக்கும் விற்பனை செய்து வந்ததாகவும் அநுராதபுரம் தலைமையக குற்றத் தடுப்புப் பிரிவு  பொலிஸார் நீதிமன்றத்தில்  தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட யுவதிகள் 19, 22, 25 வயதையுடைவர்கள் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ விதானவின் ஆலோசனைப்படி சந்தேக நபர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .