2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

செய்த பாவத்திற்கு 20 வருடங்களின் பின்னர் தண்டனை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிஷான் ஜயருக்)

20 வருடங்களுக்கு முன்னர் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிற்குள்ளான நபரொருவரை கம்புறுபிட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார். மாவட்ட நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளியே வந்த குறித்த சந்தேக நபர் தலைமறைவாகிவிட்டார்.

அச்சமயத்தில் இச்சந்தேக நபர் 18 வயதுடைய வாலிபராக இருந்தார். குற்றவாளியாக இனங்காணப்பட்ட குறித்த நபருக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்தது.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட குறித்த நபர் தலைமறைவாகியதால் அவரை கண்ட இடத்தில் கைதுசெய்யுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இருந்தபோதிலும் குறித்த குற்றவாளியை கண்டு பிடிப்பதில் பாரிய சிக்கலை பொலிஸார் எதிர்கொண்டனர். இறுதியாக 20 வருடங்களின் பின்னர் கனன்கேயில் தனது மனைவியுடன் வசித்துவந்த நிலையில் கம்புறுபிட்டிய பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .