2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் 13 கிலோ 180 கிராம் ரிஎன்டி போதைப் பொருள் கைப்பற்றல்

A.P.Mathan   / 2012 நவம்பர் 07 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.தியாகு)

நுவரெலியா மத்தியசந்தை கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடையொன்றிலிருந்து ரிஎன்ரி வகைப் போதைப்பொருளடங்கிய பொதியொன்றை கைப்பற்றியதுடன் சந்தேக நபரினையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று புதன்கிழமை மதியம் கைப்பற்றப்பட்ட பொதியில் 13 கிலோ 180 கிராம் ரிஎன்ரி போதைப்பொருள் காணப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த போதைப் பொருளினை பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பக்கெட் 80ரூபா வீதம் விற்றதாக தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரினை நாளை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஐ.பி. ஜயம்பதி தலைமையிலான விசேட பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .