2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விற்பனை நிலையமொன்றில் 15 இலட்சம் ரூபா கொள்ளை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னாரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று புதன்கிழமை முற்பகல் துப்பாக்கிமுனையில் 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள சிகரெட் விற்பனை நிலையத்திலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அந்த விற்பனை நிலையத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் தெரிவிக்கையில்,

'விற்பனை நிலையத்தை திறந்து பணத்தை  வங்கியில் வைப்பில் இடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த வேளையில் முகத்தை தலைக்கவசங்களால் மறைத்தவாறு  மோட்டார் சைக்கில் ஒன்றில் வந்த இருவர், விற்பனை நிலையத்தினுள் புகுந்து கைத்துப்பாக்கியை காட்டி என் மீது தாக்குதலை நடத்திவிட்டு  விற்பனை நிலையத்திலிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கொள்ளை இடம்பெற்ற விற்பனை நிலையத்திற்கு வருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனக் கூறினார்.

மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்தவின் பணிப்புரைக்கு அமைய மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .